தெல்லிப்பழை: குழந்தை மரணம்-கர்ப்பம் வேண்டாமாம்!
கொரோனா தொற்று சிறார்களை தாக்க தொடங்கியுள்ள நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு வயதேயான குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்டா மாறுபாடு பரவுவதால் முடிந்தால் ஒரு வருடத்திற்கு கர்ப்பத்தை தாமதப்படுத்துமாறு சுகாதார நிபுணர்கள் இலங்கை பெண்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்கள்.
டெல்டா மாறுபாடு காரணமாக தாய் மற்றும் குழந்தை இருவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக டி சொய்ஸா மகப்பேறு மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் அறிவித்துள்ளார்.
“புதிதாக திருமணமான பெண்கள் மற்றும் ஏற்கனவே குழந்தைகளைப் பெற்ற பெண்கள் குடும்பக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தவும், முடிந்தால் ஒரு வருடத்திற்கு கர்ப்பத்தை தாமதப்படுத்துங்கள் . கொரோனா ஒரு புதிய நோய். எங்களுக்கு இப்போது அது தொடர்பாக குறைந்த அளவு விடயங்களே தெரியும் . ஒரு வருடம் கழித்து, நாங்கள் இந்த வைரஸ் தாய்மார்களையும் குழந்தைகளையும் எப்படி பாதிக்கும் என்று மேலதிக தகவல்களை பெறுவோம் மேலும் அதற்குள் மிகவும் பயனுள்ள தடுப்பூசிகளும் கிடைக்கலாம், “என்று அவர் கூறியுள்ளார்.
Post a Comment