தமிழரசில் வெள்ளையடிப்பு:துடைப்பதுடன் மாவை,சீ.வீ.கே!

மீண்டுமொரு முறை தமிழரசு கட்சியின் கோல்மால் அரசியல் அம்பலமான நிலையில்; அவசரமாக ஒழுங்கு செய்யப்பட்ட வெள்ளையடிப்பு பத்திகையாளர் சந்திப்பு இன்று மார்டின் வீதி தமிழரசு அலுவலகத்தில் நடத்தப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே சர்வதேச விசாரணை கோருகிறநிலையில் புலிகளது போர்க்குற்றத்தையும் விசாரிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அனுப்பப்பட்ட  கடிதத்தில் ஒப்பமிடாதவாறு பங்காளிகள் முதல் உள்வீட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை தப்பித்திருந்தனர்.

இதனால் வழமையான தனது அரசியல் சித்துவிளையாட்டு அம்பலமான நிலையில் மாகாணசபை கனவிலிருக்கின்ற மாவை சேனாதிராசா மற்றும் சீ.வீ.கே.சிவஞானம் வரையில் அழைத்து தனது வெள்ளையடிப்பினை செய்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.

தமிழரசு தரப்பில் புலிகளது போர்க்குற்ற விசாரணைக்கான கடிதம் அனுப்பப்படவில்லையென்ற சீ.வீ.கே.சிவஞானம் தமிழரசு தலைமையகத்தில் எம்.ஏ.சுமந்திரனின் வெள்ளையடிப்பிற்கு துடப்பம் வாங்கிய பரிதாபம் ஊடகவியலாளர்களால் கேலியாக பார்க்கப்பட்டது.

ஏற்கனவே இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியுமென, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சி.சிறீதரனும் போட்டிக்கு கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்றை நடத்துவது குறிப்பிடத்தக்கது.


No comments