தேர்தல் ஆணையம் நடவடிக்கைக்கு கோருகிறது!இலங்கையின் முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் லொகன் ரத்வத்தவின் கட்டுக்கடங்காத நடத்தை சட்டத்தின் ஆட்சிக்கு சவாலாக உள்ளதாக தேர்தல் ஆணையம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் பிரதிநிதிகள் மீது பொதுமக்களின் நம்பிக்கையை குறைத்து, ஜனநாயக தேர்தலின் முடிவுகள் குறித்து பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொடர்பாக மக்களுக்குள் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், நாடாளுமன்ற சபாநாயகர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது.


No comments