சாதிய பிளவு:கோத்த அரசின் அடுத்த துருப்பு!

வடகிழக்கில் சாதிய மோதல்களை தூண்டிவிட இந்திய தூதரகம் முன்னெடுத்த முயற்சிகள் தோற்றுப்போக தற்போது இலங்கை அரசு அம்முயற்சியில் மும்முரமாகியுள்ளது.

யாழ் மாவட்டத்தில் சாதி ரீதியாக மக்களின் எண்ணிக்கை தருமாறு, இராணுவத்தினரால் அரச அதிகாரிகள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

பிறப்பு சான்றிதழ் படிவத்தில் கூட சாதி எனும் இடத்தில் இலங்கை தமிழர் என்பதே குறிப்பிடப்படுகின்ற நிலையில் இராணுவத்தினரின் செயற்பாட்டிற்கு பலரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர் 

யாழ் மாவட்டத்தில் உள்ள கிராம சேவகர்களால் இவ்விபரத்தை தருமாறு கோரியுள்ளனர். இருப்பினும் பல கிராம அலுவலகர்களால் தம்மால் இப்படியாக தகவல் தரப்பட முடியாது எனவும் கூறியுள்ளனர்.

மக்களில் ஆண், பெண் என இரு பிரிவினர் மட்டுமே காணப்படுகின்றனர். இந்நிலையில் இராணுவத்தினரால் இவ்வாறு விபரம் திரட்டப்படுவதற்கான காரணம் யாது எனவும் தெரியாமல் மக்கள் குழம்பியுள்ளனர்.  வடமராட்சி பகுதியில் எள்ளங்குளம் இராணுவத்தினர், ஊரிக்காடு இராணுவத்தினர் மற்றும் கொடிகாமம் பகுதி இராணுவத்தினர் போன்றோராலேயே இவ் விபரங்கள் கேட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments