கைத்தொலைபேசியில் புலிகளாம்:கிலியில் கைது!கைத்தொலைபேசியில் விடுதலைப் புலிகளின் புகைப்படங்கள் வைத்திருந்ததாக மேலும் இருவர்; கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பகுதியில் வீதி சோதனையின் போது மறிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களது கைத்தொலைபேசியில் விடுதலைப்புலிகளது படங்கள் இருந்ததாக கூறி கைது நடந்துள்ளது.

இதனிடையே பேஸ்புக்கில், புகைப்படங்களை பதிவிட்ட குற்றங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து நீதித்துறையுடன் பேசி, அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படும். குறித்த கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பில் நாமல் ராஜபக்ச நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  


No comments