மட்டக்களப்பு விபத்து!! ஒருவர் பலி!!


மட்டக்களப்பு - கல்முனை, கிரான்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மகிழுந்து ஒன்றும் உந்துருளியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உந்துருளியை செலுத்திய களுதாவளையைச் சேர்ந்த 21 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.No comments