சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்றுமில்லை!தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு விசமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களையும் விசாரிக்க கோரி கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனால் ஆவணம் ஒன்று அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அது முற்றிலும் ஒரு பொய்யான விடயமெனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

No comments