சிங்கள தேசம்:ரஞ்சனுக்கும் ஆனந்தசுதாகரனிற்கும் நீதி?
இலங்கை தேசிய சிறைக்கைதிகள் தினத்தினை முன்னிட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொது மன்னிப்பில் விடுவிக்கப்படலாம் என தான் எதிர்பார்த்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதி இலங்கை சிறைக்கைதிகள் தினமாகும். அன்றைய தினத்தை முன்னிட்டு , நன்னடத்தை அடிப்படையிலும் , ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்ட சில கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.
அந்நிலையிலையே அன்றைய தினம் ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவரும் விடுதலை செய்யப்படுவார் என எதிர்க்கட்சி தலைவர் எதிர்ப்பார்த்து உள்ளார்.
Post a Comment