இலங்கையர் குறித்து நியூசிலாந்து கவலை!



நியூசிலாந்தின் (Auckland) உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நேற்று 7 பேருக்கு கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்தியதில் 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆடன் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் ஒரு ஊடக சந்திப்பை நடத்தியபோது இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையர்  அவர் தனது தாக்குதலை தொடங்கிய சில நிமிடங்களில் பொலிஸார் சுட்டுக் கொன்றனர், எனினும் நீதிமன்ற உத்தரவின் காரணமாக அவரது பெயரை வெளிப்படுத்த முடியவில்லை என்று கூறினார்.

எனினும் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்த முகமட் சம்சுதீன் ஆதில் என்பவரே கொலையாளியென தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments