500 அண்மித்தது வடக்கு!

வடக்கு மாகாணத்தில் இம்மாதத்தின் முதல் 6 நாள்களில் 75 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் கூடிய அளவாக வவுனியா மாவட்டத்தில் 29 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 27 பேரும் கடந்த 6 நாள்களில் உயிரிழந்துள்ளனர் என்று வடமாகாண சுகாதாரத்திணைக்களத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணத்தில் நேற்று திங்கட்கிழமை 11 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.அவர்களுள் யாழ்ப்பாண மாவட்டத்தில் 5 பேரும் வவுனியா மாவட்டத்தில் 3 பேரும் முல்லைத்தீவில் 2 பேரும் கிளிநொச்சியில் ஒருவரும் என 11 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் 2020 மார்ச் தொடக்கம் நேற்று திங்கட்கிழமை வரை வடக்கு மாகாணத்தில் 488 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.


No comments