லொகானிற்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு!லொகான் ரத்வத்தையின் அநுராதபுர சிறை அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு 8 தமிழ் அரசியல் கைதிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி  எம். ஏ சுமந்திரனும் சட்டத்தரணி கேசவன் சயந்தனும் ஆஜாரராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார். 

அண்மையில் அனுராதபுரம் சென்றிருந்த எம்.ஏ.சுமந்திரன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்டிருந்தார்.

முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைதிகளை சந்தித்து திரும்பியிருந்தனர். 


No comments