யே என சட்டப்படி பெயரை மாற்றும் கன்யே வெஸ்ட்


அமெரிக்க ராப்பர் கன்யே வெஸ்ட் தனது பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றி யே (YE) என புதிய பெயரை வைக்கவுள்ளார்.

இதற்கான அனைத்து ஆவணங்களையும் சட்டப்படி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நீதி மன்றில் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் தனிப்பட்ட காரணங்களை மேற்கோள் காட்டி பெயரை மாற்ற நீதி மன்றிடம் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

யே என்பது பைபிளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொல்லாகும். கன்யே வெஸ்ட் தனது ருவிட்ர் பக்கத்தில் யே (YE) என பெயரை மாற்றியுள்ளார். அதில் நான் யே எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments