தமிழ் எம்பிமார் நேரடியாக சம்பளத்தை கொடுக்கின்றனர்!

 
கொரோனா பேரிடலால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் பொருட்டு மருத்துவமனை உபகரணங்களைப் பெற, தங்களுடைய சம்பளத்தை நன்கொடையாக வழங்க எதிர்கட்சி முன்வந்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு முக்கியமான இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதன் அடிப்படையில், கொரோனா பேரிடலால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் பொருட்டு மருத்துவமனை உபகரணங்களைப் பெற, தங்களுடைய சம்பளத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்பிமார் நேரடியாக வடகிழக்கு மக்களிடம் தங்கள் ஊதியத்தை கையளிக்க திட்டமிட்டு;ள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்த சி.வி.விக்கினேஸ்வரன் நிலைப்பாடு தெரியவரவில்லை.  


No comments