அமெரிக்க ரோன் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!!


தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட ஒரு குடும்பத்தின் 10 பேர் கொல்லப்பட்டனர் என அத்தாக்குலில் உயிர் பிழைத்த அதே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் அனைத்துலக ஊடக ஒன்றுக்கு கருத்துரைத்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை தற்கொலைதாரி ஒருவரை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றுக்கு ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் அக்குண்டுதாரி உயரிழந்ததாகவும் அமெரிக்கா இராணுவம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அத்தாக்குதலில் உயிர் தப்பிய உறவினர் ஒருவரான ராமின் யூசுஃபி கருத்துரைக்கையில்:-

இது ஒரு மிருகத்தனமான தாக்குதல். அது தவறான தகவலின் அடிப்படையில் நடந்ததுள்ளது.

நேற்றைய தாக்குதலில் தன்னுடைய உறவினர்கள் அதாவது 6 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த குழுந்தைக்களில் வயது குறைந்தவர் 2 வயதும் வயது கூடிய குழந்தைக்கு 12 வயதும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயிரிழந்தவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்காக அமெரிக்காவின் நுழைவிசைக்கு விண்ணப்பித்திருந்ததாகவும். அவர்கள் அமெரிக் தூதரக தொலைபேசிக்காக காத்திருந்தாகவும். கொல்லப்பட்ட உறுப்பினரில் ஒருவர் முன்னர் அமெரிக்கப் படைகளுடன் மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார். அமெரிக்கா செய்தது தவறு அது பொிய தவறு என  மற்றொரு குடும்ப உறவினரான அஹ்மதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மத்திய கட்டளை இந்த சம்பவம் குறித்த அறிக்கைகளை விசாரிப்பதாக கூறியுள்ளது, ஆனால் 10 பேர் எப்படி இறந்தனர் என்பது தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளது.

ஒரு அறிக்கையில், ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து பல "கணிசமான மற்றும் சக்திவாய்ந்த அடுத்தடுத்த வெடிப்புகள்" நடந்ததாக அது கூறியது.

உள்ளே அதிக அளவு வெடிபொருட்கள் இருந்திருக்கலாம், அது கூடுதல் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம்" என்று அது கூறியது.

No comments