கரைச்சி பிரதேசசபை கொத்தணி:தென்மராட்சியிலும் சிக்கல்!

 


கரைச்சி பிரதேச சபை கொரோனா கொத்தணி உக்கிரமடைய தொடங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை தொடக்கம் மீண்டும் தொற்று ஆரம்பித்துள்ள நிலையில் தவிசாளர்,உறுப்பினர்களான ஜீவன்,ஜேசு ராஜன் சிவகுமார் ,கணேசலிங்கம் குமார சிங்கம் ஆகியோருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

சபையின் முரசுமோட்டை உறுப்பினர் குமார், கோணாவில் உறுப்பினர் சுப்பையா கரைச்சி பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஊழியர்கள் பலரும் தொற்றுக்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதனிடையே சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொடிகாமம் மீன் வியாபாரி, இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள்,  தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்,  வெளி மாவட்டத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தென்மராட்சி பிரதேசத்திற்குட்பட்ட கொடிகாமம், சாவகச்சேரி, வரணி, எழுதுமட்டுவாழ்,பகுதிகளில் கொரோனா அபாய நிலை அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சுகாதாரத் தரப்பினர் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

கொரோனாத் தொற்று மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்ப்பதுடன், அத்தியாவசியமான பயணங்களின் போது சுகாதார வழிபாட்டல் அறிவுறுத்தல்களை மிகவும் இறுக்கமாக பேணுமாறும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments