கௌதாரிமுனைக்கு காசுடன் வருகிறார் டக்ளஸின் தரகர்!இலங்கை - சீன கூட்டு நிறுவனத்தினால் கௌதாரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள கடல் அட்டை பண்ணையை தனது ஆதரவு கௌதாரிமுனை மீனவ சங்கத்திடம் கையளிக்கவுள்ளதாக டக்ளஸ் அறிவித்துள்ளார்.

சீன கடலட்டை பண்ணையை பரீட்சார்த்த கடலட்டைக் குஞ்சு பராமரிப்பு நிலையம் எனவும் டக்ளஸ் புதிய பெயர் சூட்டியுள்ளார்.

இதனிடையே பண்ணைகளை அமைப்பதற்கான ஆரம்ப முதலீடுகளை வழங்குவதற்கு தனியார் முதலீட்டாளர் பெயரில் ஒருவரை கடற்றொழில் அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் சர்ச்சைகள் மூண்டுள்ளது.


No comments