யாழும் நிரம்பி வழிய தொடங்கியது!

யாழில் கொரோனா தொற்று எகிறத்தொடங்கியுள்ளது.கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து கோப்பாயில் 400 பேரால் நிரம்பியுள்ள நிலையில் அவசர சிகிச்சை பிரிவும் நிரம்பியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு காரணமாக அனுராதபுரத்திலிருந்து நாளிற்கு மூன்று தடவையாக தருவிக்கப்படுவதாக தெரிவித்த அவர் வைத்தியசாலை வருபவர்கள் தடுப்பூசி விநியோகிக்கப்பட்ட அட்டையுடன் வரவும் கோரிக்கை விடுத்துள்ளார். 


No comments