வன்னியில் நாளுக்கு நாள் முளைக்கும் போர் வெற்றி சின்னங்கள்!கோத்தா ஆட்சி பொறுப்பேற்ற பின்னராக வெகுவேகமாக இராணுவ போர் வெற்றிச்சின்னங்களை இலங்பை படைகள் அமைத்துவருகின்றன.

ஏற்கனவே கொக்காவில்,மாங்குளம்,முல்லைதீவென தூபிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கிளிநொச்சி இரணைமடுச் சந்தி பகுதியில் வீதிக்கு குறுக்கே விபத்துக்களை ஏ;படுத்தும் வகையில் இராணுவத்தினரால் தூபியொன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

எனினும் அத்தகைய சட்டவிரோத கட்டுமானத்தை அகற்ற கரைச்சி பிரதேசசபை பலமுறை கோரியும்  அகற்றாமையினால் அதை சட்டபூர்வமாக அகற்ற மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இன்று குறித்த பகுதிக்கு தவிசாளர் பார்வையிட்டுள்ளார்.பிரதான வீதியை உள்ளடக்கி அமைக்கப்படுகின்ற தூபியை அகற்ற கோரியே கரைச்சி பிரதேச சபை வலியுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments