ஒலிம்பிக்போட்டியில் 100 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் ஜமைக்க பெண் உலக சாதனை!!


ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த பெண் உலகசாதனை படைத்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

100 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் ஜமைக்காவைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகள், ஐவரி கோஸ்ட் வீராங்கனை, சுவிட்சர்லாந்தின் இரண்டு வீராங்கனைகள், அமெரிக்க வீராங்கனை, பிரிட்டன் வீராங்கனை என 8 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன்-ஹெரா 10.61 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

10.61 வினாடிகளில் கடந்தது ஒலிம்பிக் சாதனையாகும்.

இதற்கு 10.62 வினாடிகளில் அமெரிக்க வீராங்கனை பிளோரன்ஸ் பந்தைய தூரத்தை கடந்தது ஒலிம்பிக் சாதனையாக இருந்தது.

No comments