நாட்டைவிட்டு வெளியேறினார் ஆப்கானிஸ்தான் அதிபர் ! நிலைகுலைந்தது அரசாங்கம்!


ஆப்கானிஸ்தான் அதிபர் அந்நாட்டை விட்டுவெளியேறி பாதுகாப்பான இடம் சென்றுள்ளார். அந்நாட்டின் பெரும்பாலான இடங்களைத் தலிபான்கள் கைப்பற்றி வருகின்ற நிலையில் அந்நாட்டு அரசாங்க நிர்வாகம் நிலை குலைந்துள்ளது.

குறிப்பாக இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காகவே தான் வெளியேறியுள்ளதாக ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

ஆறு மில்லியன் மக்கள் வசிக்கும் தலைநகரில் தலிபான்கள் இரத்தக் கொதிப்பைத் தவிர்ப்பதற்காக நாட்டை விட்டு வெளியேறுகிறேன் என நாட்டு மக்களுக்கு உரையாற்றி முகநூல் பதிவில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அஷ்ரப் கானி இன்று ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி தஜிகிஸ்தானுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

No comments