வல்லிபுர ஆழ்வானிற்கும் இக்கட்டு!




நாட்டில் கொரோனா தொற்று நோய் அபாயநிலை நிலவும் சூழலில் ஆரம்பமாகவுள்ள ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

 பூசைகள் பக்தர்கள் பங்பற்றுதல் இன்றி நடைபெறும். சுகாதார அமைச்சின் சுற்றிக்கையின் பிரகாரம் மதத்தலைவர்கள் உட்பட 100 அடியார்களே உரிய நேரத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கப்படுவர்.

 ஆலய உள்வீதியில் மட்டுமே பூஜைகள் மற்றும் சமய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வெளிப்புறச் சூழலில் எந்தவிதமான சமய நிகழ்வுகள் கலை நிகழ்வுகள் மற்றும் நேர்த்தி கடன் நிறைவேற்றுதல் என்வற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்கபிரதட்சணம் செய்தல், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி, தூக்கு காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களின் போது கொரோனா கட்டுப்பாடு தொடர்பான சுகாதார நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்க முடியாத சூழல் ஏற்படுவதால் இவ்வருடம் மேற்படி நேர்த்திக் கடன்களை ஆலய வளாகத்திலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் மேற்கொள்ளுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. 

ஆலய சுற்றாடல் மற்றும் ஆலயத்தை அண்டிய பகுதியில் அடியார்கள் மற்றும் பொது மக்கள் கூடுவதற்கான தெய்வீக சொற்பொழிவுகள், தெய்வீக இசை அரங்குகள், கலைநிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்குக்கான அனைத்து நிகழ்வுகளும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன.

 


No comments