யாழில் தமிழரசுக் கட்சி உறுப்பினர் மரணம்!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வடமராட்சிக் கிளையின் முன்னாள் உப தலைவரும், தற்போதைய தமிழரசுக் கட்சியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினருமான  ஓய்வு பெற்ற கிராமசேவகர் க. இரத்தினம் இன்று சனிக்கிழமை பிற்பகல் இயற்கை எய்தியுள்ளார். 

இலங்கை தமிழ்  அரசுக் கட்சியின் மிகச் சிரேட்ட உறுப்பினரும் கரவெட்டி பிரதேச சபை மற்றும்  கட்சியின் கரவெட்டி தொகுதிக் கிளையின் செயற்பாடுகளில் நீண்டகாலம் பங்காற்றிய இரத்தினம் அவர்கள் காலமானதையிட்டு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக துணைதலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.மிகச் சிறந்த ஒரு  நற்பண்புள்ள இலட்சிய விசுவாசியை இலங்கை தமிழ் அரசுக் கட்சி இழந்துள்ளதாகவும் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.


No comments