சுன்னாகம் கிணற்றில் சடலம்!


யாழ்.சுன்னாகத்தில் வயற் காணியொன்றில்; காவல் செய்வதற்காக கூலியாளாகச் சென்ற 44 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் சுன்னாகம் மேற்கு பருத்திக்கலட்டிப் பகுதியில் நடந்துள்ளது.

இன்று காலை மேற்படி இளம் குடும்பஸ்தரைத் தேடி அவரது பிள்ளைகள் வயற்காணிக்குச் சென்றிருந்த நிலையில் காணாது திரும்பியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 09 மணிக்குப் பின்னரே அதே வயலின் உரிமையாளர் குறித்த குடும்பஸ்தர் அதே வயற்காணிக் கிணறினுள் உயிரிழந்த நிலையில் சடலமாக மிதப்பதனைக் கண்டுள்ளார். 

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள நிலையில் இடம்பெற்றுள்ள குறித்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகிறது.


No comments