இங்கிலாந்தின் தோல்வி!! இனவெறியால் திட்டித்தீர்க்கப்படும் வீரர்கள்!!


ஐரோப்பிய உதைபந்தாட்டக் கிண்ணம் 2020 இறுதிப் போட்டியில் இத்தாலியிடம் அணியின் தண்டணை உதை மூலம் தோல்வி இங்கிலாந்து அடைந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்தின் கால்பந்து சங்கம் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஆகியோர் சமூக ஊடகங்களில்  வெளியாகும் இனவெறி கருத்துக்களைக் கண்டித்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைந்த விளையாட்டில் கூடுதல் நேரத்திற்குப் பிறகு 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இரு அணிகளும் இருந்தன. இத்தாலி 3-2 என்ற இலக்கை தண்டணை உதை மூலம் வென்றது. இங்கிலாந்து வீரர்களான மார்கஸ் ராஷ்போர்ட், ஜோடான் சாஞ்சோ மற்றும் புக்காயோ சாகா ஆகியோர் தண்டணை உதையை தவறவிட்னர். இவர்கள் கறுப்பர்கள் என்பதை குறிவைத்து சமூக ஊடகங்களில் கடுமையான கடுத்துக்களை பாகுபாடு காட்டிப் பதிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் எங்கள் இங்கிலாந்து வீரர்கள் சிலரை இலக்காகக் கொண்ட இணைய இனவெறியால் திகைக்கிறது. அனைத்து வகையான பாகுபாடுகளையும் உதைபந்தாட்ட சம்மேளனம் (FA) கடுமையாக கண்டிக்கிறர் எனக் குறிப்பிட்டுள்ளத.

இதுபோன்ற அருவருப்பான நடத்தைக்கு பின்னால் எவரும் அணிவகுக்கப் போவதில்லை என்பதை நாங்கள் தெளிவாகக் கூறவிரும்புகிறோம். பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு ஆதரவளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம், அதே நேரத்தில் இதற்குப் பொறுப்பானவர்களுக்குக் கடினமான தண்டனைகளை வலியுறுத்துகிறோம் என இன்று திங்கட்கிழமை அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் தனது வீரர்கள் மீது முறைகேடு செய்யப்பட்டதைக் கண்டித்து இங்கிலாந்து அணியும் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

எங்கள் அணி வீரர்களில் சிலர் விளையாட்டிற்குப் பிறகு இணையங்களில் பாரபட்சமான துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதில் நாங்கள் வெறுப்படைகிறோம் என்று குழு ட்வீட் செய்தது.

பிரதமர் ஜோன்சன் எங்கள் அணி வீரர்கள் ஹீரோக்கள் என்று பாராட்டப்படுவதற்கு தகுதியானவர் என்று கூறினார்.

இந்த பயங்கரமான துஷ்பிரயோகத்திற்கு காரணமானவர்கள் தங்களைப் பற்றி வெட்கப்பட வேண்டும்  என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

No comments