இலங்கைக்கு வந்தன 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள்


அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட  கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான மொடர்னாவின் 1.5 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

கட்டார் ஏயர்வேஸ் விமானம் மூலமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு குறித்த தடுப்பூசிகள் இன்று (16) காலை கொண்டுவரப்பட்டுள்ளன என அமெரிகத் தூதகரம் செய்தி வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவெக்ஸ் திட்டத்தின் தடுப்பூசி பகிர்வுப் பொறிமுறையின் கீழ் இந்த தடுப்பூசிகள் அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.அமெரிக்காவிலிருந்து கட்டாருக்கும், பின்னர் தோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான QR-664 என்ற விமானத்தின் மூலமாக இவை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இவற்றில் 7 இலட்சத்து 50 ஆயிரம் மொடர்னா தடுப்பூசிகள் முதல் டோசாக பொதுமக்களுக்கு வழங்கப்படு என தெரிவிக்கப்படுகின்றது.ஒரு மாதத்தின் பின்னர்  எஞ்சிய 7 இலட்சத்து 50 ஆயிரம் மொடர்னா தடுப்பூசிகள் இரண்டாவது டோஸாக பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகின்றது.

இலங்கை தனது தேசிய தடுப்பூசி இயக்கத்தில் சேர்க்கும் ஐந்தாவது தடுப்பூசி இதுவாகும் என்று மாநில அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜெயசுமனா தெரிவித்தார்.

ஏற்கனவே சினோபார்ம், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா, ஸ்பூட்னிக் வி மற்றும் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளைப் இலங்கை பெற்றுள்ளது.

No comments