கோண்டாவிலில் துண்டிக்கப்பட்ட கை பொருத்தப்பட்டது


யாழ்ப்பாணம் - கோண்டாவில், செல்வபுரம் பகுதியில், நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகி  துண்டாடப்பட்ட ஒருவரின் கை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், வைத்தியர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின் கூட்டு முயற்சியால் மீள பொருத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூடத்தில், நேற்றிரவு 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சத்திரசிகிச்சை, இன்று (01) அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

No comments