ஜேர்மனியில் இந்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது 1 மில்லியன் மின்சார மகிழுந்துகள்


இந்த மாதம் ஜேர்மனியில் 1 மில்லியன் மின்சார மகிழுந்துகள் பயன்பாட்டுக்கு வருவதாக ஜேர்மனியின் பொருளாதார அமைச்சர் பீட்டர் அல்ட்மையர் கூறியுள்ளார்.

உள்ளூர் ஊடகமான தாகஸ் ஸ்பீகிள் (Tages spiegel) நாளேட்டுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 2020 ஆண்டு நடுப்பகுதியில் குறித்த மின்சார மகிழுந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்த்திருந்த போதும் அவை 6 மாதங்கள் கடந்த நிலையில் குறித்த இலக்கை எட்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.

7 தொடக்கம் 10 மில்லியன் மின்சார மகிழுந்துகள் பயன்படுத்த வேண்டு என்பது ஜேர்மனியின் திட்டம். ஆனால் அதை விட அதிகமான மின்சார மகிழுந்துகள் பயன்படுத்தப்படலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments