பிரான்சில் கியூபா தூதரகம் மீது பெல்ரோல் குண்டுத் தாக்குதல்!!


பிரான்ஸ் தலைநகரில் அமைந்துள்ள கியூபத் தூதரகம் மீது பெல்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் தூதரகக் கட்டிடம் கடுமையாகச் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இராஜதந்திர ஊழியர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

இன்று செவ்வாயன்று தூதரகம் பிரெஞ்சு தலைநகரின் 15 வது அரோன்டிஸ்மென்ட்டில் அமைந்துள்ள அதன் வளாகத்தில் நடந்த தாக்குதலை பிரஞ்சு அரசாங்கமும் கண்டித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பது கண்டறியப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு மூன்று மோலோடோவ் கொக்டெய்ல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தூதரக வெளி கட்டிடத்தில் தீ பரவியுள்ளது. இதனையடுத்து பிரஞ்சு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படைவீரர்களும் வந்து தீயணைத்துள்ளனர்.

கியூபாவின் வெளியுறவு மந்திரி புருனோ ரோட்ரிக்ஸ் இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா மீது குற்றம் சாட்டினார். அத்துடன் இந்த நடத்தைகளை ஊக்குவிக்கும் மற்றும் வன்முறைக்கான அழைப்புகளை அமெரிக்க ஊக்குவிக்கிறது என  அவர் குற்றம் சாட்டினார். இதனை அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும் என அவர் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இச்சம்பவம் தொடர்பில் கூறுகையில், இந்த தாக்குதலை பிரான்ஸ் கண்டித்துள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பாக நீதித்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

கியூபாவில யூலை 11 ஆம் 12 ஆம் பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட போராட்டங்களை அடுத்து உலகெங்கிலும் உள்ள கியூபா தூதரங்கள் மீது எதிர்விணை ஏற்படுத்தியுள்ளது.

No comments