வல்வெட்டித்துறை முடக்கப்படலாம்?வடமராட்சியின் கரையோர நகரங்களான வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பெரும் தொற்று நிலையினை கண்டுள்ளது.

வல்வெட்டித்துறையில் நேற்றைதினம் 38 பேர் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எழுமாற்றாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இன்று 38 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சந்தேகத்தின் அடிப்படையில் 156 பேரிடம் நேற்று பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 29 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

மேலும் 32 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை பருத்தித்துறையில் ஏற்கனவே 38பேர் தொற்றுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் முடக்க நிலை சில பகுதிகளில் அமுலில் உள்ளது’.

இதனிடையே வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை நகரசபை பணியாளர்கள் அச்சத்துடன் தமது பணிகளை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டள்ளது.


No comments