முல்லை:கேப்பாபிலவில் பதற்றம்!


முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாமை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் கலகமடக்கும் பொலிசாரும் வரவழைக்கப்பட்டுள்ளதாக முல்லைதீவு செய்திகள் தெரிவிக்கின்றன.

கொத்தலாவை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தியமைக்காக ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசேப் ஸ்ராலின் உட்பட 19 ஆசிரியர்கள் முல்லைத்தீவு கோப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் அவர்களது விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க தென்னிலங்கையில் இருந்து ஏனைய தொழிற்சங்க பிரதிநிதிகள் வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலினையடுத்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு மாற்றுடைகள் வழங்குவதற்குக் கூட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எந்த தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுக்கின்றோம் என்பது தெரியப்படுத்தப்படவில்லை. முகாமுக்கு வரும் வரை போதுமான உணவு வகைகளும் வழங்கப்படவில்லை. 

முகாமில் மாற்றுடைகள் இல்லாததினால் படுக்கை விரிப்புக்களையே மாற்றுடைகளாக அணிய வேண்டிய நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


No comments