வவுனியாவிற்கு வெறும் ஆயிரம் ஊசிகளே?கொரோனா தொற்றின் நாலாம் அலை தொடர்பாக எச்சரிக்கப்பட்டுவருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்திற்கு வெறுமனே ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் ம.திலீபன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் யாழ்.மாவட்டத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் இரு கட்டங்களாக ஒரு இலட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் வன்னிக்கோ,கிளிநொச்சிக்கோ தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை.

எனினும் இலங்கை படையினர் முல்லைதீவு மற்றும் கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் தம்மிடமிருந்த மேலதிக ஊசிகளை வழங்கியிருந்தனர்.

அதேவேளை இந்திய மீனவர்களுடனான தொடர்பை சுட்டிக்காட்டி மன்னாரிலும் ஊசிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வவுனியாவிற்கு ஊசி ஒதுக்கப்பட்டள்ளதாக ஈபிடிபி சார்பு நாடாளுமன்ற உறுப்பினரான ம.திலீபன் அறிவித்துள்ளார்.


No comments