தூத்துக்குடி நீர்மூழ்கி:தேடுகின்றது இந்திய உளவு அமைப்பு!



 தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு வந்ததாக சொல்லப்படும் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா நீர்மூழ்கி கப்பல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கப்பலின் வருகை இலங்கை கடற்படையை கவலைக்கு உள்ளாக்கி வைத்துள்ளது. 

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா நவீன தொழில்நுட்பம் கொண்ட நீர்மூழ்கி கப்பல். இந்தியாவின் கடற்படையில் இருக்கும் வலுவான நீர்மூழ்கி கப்பல்களில் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ராவும் ஒன்றாகும். இந்த நிலையில் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா கடந்த ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடிக்கு வந்ததாக இணையத்தில் புகைப்படம் ஒன்று வெளியானது.

தூத்துக்குடி துறைமுகத்தில் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா இருக்கும் புகைப்படம் வைரலானது. ஆனால் ஆனால் அதிகாரபூர்வமாக ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா வருகை குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. பெரும்பாலும் ரகசிய ராணுவ பணிக்காக ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா தூத்துக்குடிக்கு வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்திய கடற்படை இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. எந்த புகைப்படமும் வெளியிடவில்லை. ரோந்து சாதாரண ரோந்து பணி என்றால் பொதுவாக கப்பல்களின் வருகை குறித்து அறிவிக்கப்படும். ஆனால் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா தூத்துக்குடிக்கு சென்றது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால் கண்டிப்பாக இது சீக்ரெட் ஆப்ரேஷனாக இருக்க வாய்ப்புள்ளது என்றே கூறப்பட்டது. 

டெல்லி கடற்படை அதிகாரிகளும் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா தூத்துக்குடிக்கு சென்றதா இல்லையா என்பதை சொல்லாமல் ரகசியம் காத்து வருகிறார்கள். புகைப்படம் இந்த நிலையில்தான் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா தூத்துக்குடி துறைமுகத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துறைமுகத்தில் பணியாற்றும் நபர் யாரோ ஒருவர் இதை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ராவின் ரோந்து பணிகள் குறித்து ரகசியம் காக்கப்பட்ட நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியானது சர்ச்சையாகி உள்ளது.

 இலங்கை இந்த புகைப்படங்களை வைத்து இலங்கை ஊடகங்கள் பல செய்திகளும் வெளியிட்டு வந்தது. இலங்கைக்கு அருகே திடீரென இப்படி ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா கப்பலை இந்தியா கொண்டு வந்துள்ளது, இனி ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ரா தூத்துக்குடியில்தான் இருக்கும், என்று பல்வேறு யுகங்களுடன் பரபரப்பை கிளப்பும் வகையில் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. கசிந்த ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ராவின் புகைப்படத்தை வைத்து இந்த செய்தியை அந்த இலங்கை ஊடகங்கள் வெளியிட்டு இருந்தன. ரகசியம் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ராவின் பயணம், ரோந்து இத்தனை நாட்கள் ரகசியமாக காக்கப்பட்ட நிலையில், கசிந்த புகைப்படங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனே இந்த புகைப்படம் எடுத்தவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று கடற்படை அதிகாரிகளுக்கு உத்தரவு சென்றுள்ளது. யார் மூலமாக இந்த புகைப்படம் வெளியே சென்றது என்று கண்டுபிடிக்கும்படி உத்தரவு சென்றுள்ளது.

 துறைமுகத்தில் வேலை பார்க்கும் பணியாளர் மூலமாக இது கசிந்து இருக்கலாம் என்கிறார்கள். இலங்கை இலங்கை கடற்பகுதியில் சீனாவின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஐஎன்எஸ் சிந்துசாஸ்த்ராவின் வருகை குறித்த செய்திகள் இலங்கை ஊடகத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இப்படிப்பட்ட நிலையில் ரகசியமாக இருக்க வேண்டிய நீர்மூழ்கி கப்பல்களின் புகைப்படங்கள் இணையத்தில் கசிவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

No comments