மாகாணங்களுக்கிடையிலான கட்டுப்பாடு கடுமையாகின்றது?



டெல்டா வைரஸ் தொற்று இலங்கையில் முனைப்படைந்துள்ள நிலையில் மாகாணங்களிற்கிடையிலான பயணக்கட்டுப்பாடு கடுமைப்படுத்தப்பட்டுவருகிறது.

 மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமைக்கு கொண்டுவர எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் ஜூன் 10 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி சுற்றறிக்கை வெளியிட்டார்.


பின்னர், ஜூலை 14 முதல் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி அத்தியாவசிய கடமைகளுக்காக மாகாணங்களுக்கு இடையில் குறைந்த எண்ணிக்கையிலான பஸ் மற்றும் ரயில்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


எனினும், இந்த முடிவு எடுக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு, மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் ஓகஸ்ட் முதலாம் திகதிவரை வரை நிறுத்தப்பட்டன.


இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட பஸ் மற்றும் ரயில் சேவைகள் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கிடையில் இயங்கும் என்றாலும், மறு அறிவிப்பு வரும் வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments