நாயாறு முடக்கம்:ஆக்கிரமிப்பு சிங்களவர்களிற்கு கொரோனா!முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை கிழக்கு  கிராம அலுவலர் பிரிவின் நாயாறு  முடக்கப்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கில் சிங்கள மீனவர்கள் படையெடுத்து ஆக்கிரமித்துள்ள நாயாறு பகுதியிலுள்ள சிங்கள மீனவர்களிடையே முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து மீனவர்களின் வாடிகள் உள்ள பகுதி உடன் அமுலுக்கு வரும் வகையில் முற்றாக முடக்கப்படுவதாக முல்லைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்.

2009 ம் ஆண்டின் பின்னராக நீர்கொழும்பு முதல் புத்தளம் வரையிலான பிரதேசங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான சிங்கள ,முஸ்லீம் மீனவர்கள் நாயாறு கடலை ஆக்கிரமித்துள்ளதுடன் வாடிகளை அமைத்து தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments