மீண்டும் காணாமல் போனோருக்காக ஜநா முன் போராட்டம்!


யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ்ப்பானம் நாவலர் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் யாழ் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை ஐ நா பெற்றுத்தர வேண்டும் எனவும் நீண்ட காலமாக தமது உறவுகளை தேடிய வண்ணம் வீதிகளிலும் மழை,வெயில்களிலும் போராடி வருவதாகவும்  எனினும் தற்போது உள்ள கொரோனா நிலை காரணமாக தாம்  போராட்டத்தில் ஈடுபட முடியாத நிலை காணப்படுவதாகவும், எனினும் தமது பிள்ளைகள் கிடைக்கும் வரை  போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சங்கத்தின் தலைவி  பூங்கோதை தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினரின் பெற்றோர் கலந்து கொண்டு தமது பிள்ளைகளை பெற்றுத் தாருங்கள் என கோஷம் எழுப்பினர்.


No comments