தடுப்பூசி பெற்றும் மரணம்!கொரோனா தடுப்பூசிகளது இரண்டு கட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர்  கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலியைச் சேர்ந்த ராஜா ரமேஸ்குமாரன் வயது -44 என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர், சுயநினைவற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில்; இன்று நண்பகல் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவருக்கு இன்று ஒரே நாளில் இரு தடவைகள் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

சுமார் 66 வயது வயோதிப பெண்ணுக்கு இரு கையிலும் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments