பயணத் தடை ஒருபுறம்! திருட்டு மறுபுறம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் நேற்றிரவு 3 கடைகளில் கூரை பிரித்து இறங்கி திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்

தெரிவித்தனர்.

பயணத்தடை நடைமுறையில் உள்ள நிலையில் வட்டுக்கோட்டை சங்கரத்தை வீதியில் நேற்றிரவு 3 கடைகளில் கூரை பிரிக்கப்பட்டு திருட்டு இடம்பெற்றிருந்தது.

இந்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சுழிபுரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 45 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பால்மா வகைகள், தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

திருட்டுச் சம்பவங்களை ஏற்றுக்கொண்டு வாக்குமூலம் வழங்கியுள்ள சந்தேக நபர், தான் தனியவே திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் நாளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, பயணத்தடை நடைமுறையில் இருந்த நிலையில் ஒரு வாரத்துக்கு முன்னர் மாவடி - மூளாய் வீதியிலும் கடை ஒன்று கூரை பிரித்து இறங்கி பணம் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments