முள்ளிவாய்க்காலில் விபரம் திரட்டும் காவல்துறை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் விபரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் இலங்கை காவல்துறை ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், தங்கியிருப்பவர்களின் விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான படிவம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் இல்லாதவாறு முல்லைதீவில் மட்டும் தற்போதைய முடக்க நிலையில் முன்னெடுக்கப்படும் அவசர பதிவு நடவடிக்கை மக்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது.


No comments