மாதகல் கடல் கரையில் 110 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!!


யாழ்ப்பாணம், மாதகல் கடல் கரை பகுதியில் 110 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாதகல் கடல் வழியூடாக படகில் ஒருவர் கஞ்சா போதை பொருளை கடத்தி வருவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படையினர் கரையில் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர். 

இந்நிலையில் படகில் கஞ்சாவை கடத்தி வந்து கரையில் இறக்க முற்பட்ட வேளை கடற்படையினர் அவரை முற்றுகையிட்டு கைது செய்தனர். 

இதன்போது அவர் படகில் கடத்தி வந்திருந்த 110 கிலோ கஞ்சாவையும் கடற்படையினர் மீட்டனர். 

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு தகவல் அளிக்கபப்ட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , கடற்படையினரால் கைது நபரையும், மீட்கப்பட்ட கஞ்சாவையும் பொறுப்பெடுத்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை நேற்று மன்னாருக்கு வடக்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது, சுமார் 29 கிலோ மற்றும் 800 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு டிங்கி படகு மற்றும் இரு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது கரையை நோக்கி பயணித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு 02 பைகளில் 14 பார்சல்களாக வைத்திருந்த சுமார் 29 கிலோ மற்றும் 800 கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த டிங்கி படகு மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

No comments