சீன காய்ச்சல்:ஆளில்லா விமானம் வாங்கும் இந்தியா?இலங்கையின் திட்டங்களில் சீனாவின் பங்கு இருப்பதால் இதனால்  இலங்கைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பினை அதிகரிக்க இந்தியா  அமெரிக்காவிடமிருந்து  30 ஆளில்லா விமானங்களை, மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கொள்வனவு செய்யவுள்ளது என இந்திய கடற்படையின் துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

 இவை predator MQ-9B  கடல் பாதுகாப்பு ஆளில்லா விமானங்கள் ஆகும்.  

தொடர்ந்து 48 மணி நேரம் வரை பறக்கக்கூடியதுடன்  உச்ச பயண நிறை 5.6 தொன்னுக்கும் அதிகமாகும்.   நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கும் வல்லமை மற்றும் கடல் கண்காணிப்பிற்கான நவீன தொழில்நுட்ப வசதி இந்த ஆளில்லா விமானங்களில் உள்ளன.

சீனா கொழும்பில் முன்னெடுக்கும் துறைமுக நகரத் திட்டம், இந்தியாவின் அபிலாஷைகளுக்கு அச்சுறுதலாக அமைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments