ஓன்லைன் மதுபானம் கிடைக்காதாம்!

 


இலங்கையில் ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதிப்பதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்வது குறித்து ஆலோசித்து வந்த நிலையில், இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வெளியானதை அடுத்து இந்தத் தீர்மானம் வெளியாகியுள்ளது.

மாணவர்கள் கல்வி கற்க இணைய வழிகள் போதியளவின்றி திண்டாடிவருகின்றனர்.இதனிடையே இணையத்தின் மூலம் மதுபான விற்பனை : இலங்கை மருத்துவர் சங்கம் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தன.

பல்பொருள் அங்காடிகளில் இணையவழி மூலம் மதுபான விற்பனையை செயல்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை மருத்துவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.

அக்கடிதத்தில், இணையத்தில் மதுபானம் விற்பதை அனுமதிப்பதன் ஊடாக உடல்நலம் மற்றும் பொருளாதார விளைவுகள் குறித்து இலங்கை மருத்துவர் சங்கம் எடுத்துரைத்துள்ளது.

கோத்தா ஆட்சி பீடமேற மருத்துவ சங்கம் முன்னணியில் நின்றிருந்தமை குறிபபிடத்தக்கது.


No comments