வாகன இறக்குமதி தடை தொடரும்!ஏற்கனவே வாகன இறக்குமதி தடையால் அரச அதிகாரிகள் தலையில் இடிவிழுந்துள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தடையை மீறி இரகசியமாக எம்பிமாருக்கு வாகனங்களை அரசு இறக்குமதி செய்ய முற்பட அரச அதிகாரிகளிற்கும் மகிழ்ச்சி அள்ளிக்கொட்டியிருந்தது.

ஆறு வருடத்திற்கொரு முறை வழங்கப்படும் வாகன பெமிட்களை விற்பதனை வியாபாரமாக கொண்டிருந்த அதிகாரிகளே மகிந்த நிலையில் அமைச்சர் வழங்கிய விசேட செவ்வியில் இந்த நேரத்தில் வாகனங்கள் இறக்குமதி செய்யக்கூடாது என்பதே அனைவரினதும் முடிவு என கூறினார்.

ஆகவே குறித்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.


No comments