மூன்று ராஜபக்சக்களே காரணம்:சீற்றத்துடன் கம்மன்பில!

 


எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் கம்மன்பிலவை சிக்க வைத்து தப்பிக்க முற்பட்ட ராஜபக்சக்களை அம்பலப்படுத்த தொடங்கியுள்ளார் கம்மன்பில.

வாழ்க்கைச் செலவு தொடர்பிலான உப-குழு, கடந்த 9ஆம் திகதியன்று கூடியது எனத் தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில, அந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்சஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகிய மூன்று ராஜபக்சர்களும் இருந்தனர் என்றார்.

அவர்கள் மட்டுமன்றி, அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, டலஸ் அழகபெரும, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட நானும், இராஜாங்க அமைச்சர்களான அஜிட் நிவாட் கப்ரால், லசந்த அழகிய வண்ண ஆகியோரும் பங்கேற்றிருந்தோம் என்றார்.

அரசிற்கெதிரான கம்மன்பிலவின் பாய்;ச்சலையடுத்தே நேற்றிரவு அவசர அவசர ஊடக அறிக்கையினை கோத்தபாய விடுத்திருந்தார். 


No comments