நாமலை சந்திக்க மாமா வேலை!


விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை ஊடகங்களிற்கு முன்னால் செல்லக்கூடாதென ஜனாதிபதியின் ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கியமை தெரியவந்துள்ளது.

கடந்த 20; ம் திகதி அனுராதபுர சிறையிலிருந்து கொழும்பிற்கு அழைக்கப்பட்ட அவர்களிற்கு ஜனாதிபதியின் ஆலோசகர் ஆலோசனை தெரிவித்ததுடன் ஊடக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கரவெட்டி பிரதேச சபையின் குப்பையகற்றும் நிகழ்வில் கலந்து கொள்ள விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச வருகை தரவுள்ள நிலையில் அவரை அரசியல் கைதிகளது குடும்பங்கள் மூலம் மகிழ்விக்கும் மாமா வேலையில் அங்கயன் இராமநாதன் குதித்துள்ளமை தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ள நிகழ்வில் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களை பங்கெடுக்க நிர்ப்பந்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.


No comments