வடக்கிற்கு அழைத்துவரப்பட்டவர்கள் யார்?

 


பொது முடக்கத்தின் மத்தியில் வடக்கிற்கு சொகுசு பேருந்துகளில் வடக்கிற்கு அழைத்துவரப்பட்டவர்கள் தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.

ஏ-9 வீதி ஊடாக 20இற்கும் அதிகமான பேருந்துகளில் இராணுவ பாதுகாப்புடன் அவர்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர்.

ஏ-9 வீதியூடாக வடக்கிற்கு வந்து சேர்ந்த வாகன தொடரணியை ஊடகவியலாளர் ஒருவர் அறிக்கையிட்டுள்ள போதும் வந்த போதிலும் அதில் அழைத்து வரப்பட்டவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

இதனிடையே இலங்கையில் அனைத்து விமான நிலையங்களும் இன்று முதல் (01) முதல் மீள திறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக்க தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கை வரும் விமானமொன்றில் வரக்கூடிய ஆகக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

11 நாள்களுக்கு முன்னர் இரவு 11:59க்கு சகல விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


No comments