வடமராட்சி:ஆறு மாத குழந்தைக்கும் கொரோனா!வடமராட்சி தும்பளை தெற்கு பகுதியில் 6 மாத குழந்தை மற்றும் 9 வயதுச் சிறுவர் உட்பட யாழ் மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் வியாழக்கிழமை சளி காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக சென்ற 13 வயதுச் சிறுமிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அவருடன் நேரடித் தொடர்பு கொண்ட குடும்பத்தினருக்கு நேற்று வெள்ளிக்கிழமை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  

இதில் 6 மாத குழந்தை மற்றும் 9 வயதுச் சிறுவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments