முகக்கவசம் அணியாததால் பிரேசில் அதிபருக்கு அபராதம்!


பிரேசிலில் அமைந்துள்ள சா பவுலா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் முகக்கவசம் அணியாமல் உந்துருளிப் பேரணியில் கலந்துகொண்டார்.

இந்நிலைியல் சா பவுலா மாகாணத்தின் நிர்வாகம், கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமல் அதிக அளவில் ஆட்களைத் திரட்டி பேரணியில் ஈடுபட்டதாகக் கூறி அதிபர் போல்சனாரோவுக்கு 100 அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது.

No comments