அடங்காவிட்டால் தொழிலில் ஈடுபட முடியாது?

மீனவ சங்கங்களின் சட்டவரையறையை அனுசரித்து செயற்படாத தொழிலாளர்கள் அனைவரும் உறுப்பரிமையிலிருந்து நீக்கப்படுவர். அவர்களது தொழில் நடவடிக்கைகள் அனைத்தம் சட்டவிரோதமானவையாக வரையறைசெய்து சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் டக்ளஸ் ஆதரவு மீனவ சங்கங்கள் மிரட்டல் விடுத்துள்ளன.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளுர் மீனவர்களிடமிருந்து மீனை கொள்வனவு செய்யவிடாது தடுப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டமைக்கு விளக்கமளிக்கையிலேயே அவரது ஆதரவு மீனவ சங்கங்கள் எச்சரிக்கையை விடுத்துள்ளன.

டக்ளஸ் ஆதரவு கடற்றொழிலாளர்கள் மற்றும் பொது அமைப்பகளின் பிரதிநிதிகள் இணைந்து தமது கடற்றொழில் நடவடிக்கைகள் மற்றும் சந்தைப்படுத்தலில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை இன்று செவ்வாய்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் நடத்தியிருந்தனர்.

வேறொரு அரசியல் தரப்பினர் இதை குழப்பும் நோக்குடன் மீனவ தரப்பினரை தூண்டிவிட்டு ஊடகங்களில் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். அவ்வாறான செய்திகள் அனைத்தும் பொய்யானவை.

இதனிடையே நேற்றைய தினம் ஊர்காவற்துறை மீனவ சங்கப்பிரதிநிதிகள் தங்களுடைய கடலுணவை விற்பதற்கு கட்சி சார்ந்து அமைச்சர் தலையிடுவதை நாம் விரும்பவில்லை . நாம் அதனை வன்மையாக கண்டிக்கிறோம். மீனவ அமைப்புக்கள் அமைச்சர் டக்ளஸின் கைப்பொம்மையாகியிருப்பதாக குற்றஞ்சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments