கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை:2மாத குழந்தைக்கும் தொற்று!கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை விவகாரம் ஓயாத சர்ச்சையாக உள்ளது.இதன் எதிரொலியாக கிளிநொச்சி தர்மபுரத்தில் 2 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் தந்தை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி தொற்றுக்குள்ளானவர் என தெரியவருகின்றது.

இதனிடையே நேற்றைய தினம் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் 14 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் 7 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் அரச ஆதரவில் தொழிற்சாலை இயக்கபட்டேவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மதியத்தின் பின்னரே கடமையிலிருப்பவர்களிற்கு கொரோனா தாக்குவதாக கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments