திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்! சிரட்டைகள் சுட்டிகள் வழங்கி வைப்பு!


திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் (Union of Civil Societies - Trincomalee District) ஊடாக, "அகரம் மக்கள் மய்யம்" அமைப்பின் ஒருங்கிணைப்பில், நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட எமது இரத்தச் சொந்தங்களை நினைவு கூரும் முகமாக "முள்ளிவாய்க்கால் நினைவு" வாரத்தின் முதலாம் நாளாகிய நேற்று, திருக்கோணமலை மக்கள் வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலி செய்துள்ளனர்.

எதிர்கால சந்ததியினருக்கு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்திறத்தை கடத்தி செல்வதற்காகவும், திருக்கோணமலை இளைஞர்களால் "முள்ளிவாய்க்கால் கஞ்சியினை" நினைவு கூரும் வகையில் அடையாளமாக சிறிதளவு  அரிசி உள்ளிட்ட  மற்றும் சிட்டி விளக்குடன் கூடிய  "மே 18"  பொறிக்கப்பட்ட சிரட்டைகள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை  பேணி வீடுகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.No comments